யார் தனக்கு நேர்வழி தெளிவான பின்னரும் இத்தூதருடன் முரண்பட்டு, முஃமிணீன்கள் (நம்பிக்கை கொண்டோரின்) வழி அல்லாததை பின்பற்றுகின்றானோ அவன் செல்லும் வழியிலேயே அவனை செல்லவிட்டு,அவனை நாம் நரகத்தில் நுழைவிப்போம்.செல்லுமிடத்தில் அது மிக கெட்டதாகும். (அல்குர்'ஆண் 4:115)
குறிப்பு : இந்த வசனம் இறங்கும்போது," முஃமிணீன்கள்" என்பவர்கள் நபி( ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் )அவர்களோடு, சஹாபாக்கள் மட்டும்தான் இருந்தனர். அவர்கள் செல்லாத வழிகளில் சென்று நரகத்தில் நுழையும் அபாயத்திலிருந்து அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும்.

இஸ்லாம் - தூய்மையான மனம்கொண்ட ஸலஃப்களின்(முன்னோர்களின்)பாதையில்...........
Thursday, 27 August 2009
சஹாபாக்கள் என்றால் யாரை குறிக்கும்?
இப்னு ஹஜர் அல் அஸ்கலானி கூறினார், " "ஸகாபீ " என்பதன் அர்த்தங்களில் நான் எதிர்கண்ட விளக்கங்களில் மிக சரியான விளக்கம் எதுவென்றால், "யார் நபி (ஸ) அவர்களை சந்தித்து ,அவர்களை ஈமான் கொண்டு, பின்பு முஸ்லிமாகவே மரணம் அடைகிறாரோ, அவர்தான்." இது அவர்களோடு சிறிய நேரம் அல்லது வெகு நேரம் இருந்தவர்களையும், அவர்களிடமிருந்து அறிவித்தவர்களையும், அறிவிக்காதவர்களையும்,அவர்களை கண்டு விட்டு, அவர்கூட உட்காராதவர்களையும், அவர்களை குருட்டினால், காண முடியாதவரையும் ,உள்ளடக்கும்." (அல் இஸாபாஹ்- இப்னு ஹஜர் (1/4-5))
Subscribe to:
Posts (Atom)