இஸ்லாம் - தூய்மையான மனம்கொண்ட ஸலஃப்களின்(முன்னோர்களின்)பாதையில்...........

Thursday 4 August 2011

'இஸ்ராயீல்' என்ற நபியை நாம் அவமதிக்கின்றோம்.

கேள்வி:
தீமை நிறைந்த நிராகரிக்கும் யூத நாட்டை’இஸ்ராயில்’ என்று சொல்வதும் இந்த பெயரை வைத்து அந்த நாட்டை தரம் தாழ்த்தி பலி சொல்வதும் ஆகுமானதா ?

பதில்:
இது ஆகுமானது இல்லை என்பதுதான் சரியானது. யூதர்கள் ஒரு பெரிய சதியை செய்துள்ளார்கள். முஸ்லிம்களின் இடங்களில் அவர்களுக்கு (நமது நபியின் பெயரான) இஸ்ராயில் என்ற பெயரில் நாடு அமைக்க அவர்களுக்கு உரிமை உண்டு என்று எண்ணம் கொண்டுள்ளார்கள். இந்த சதியில் முஸ்லிம்களும் வீழ்ந்துள்ளார்கள். ‘இஸ்ராயீல்’ என்ற வார்த்தையை முஸ்லிம்கள் எழுத்துகளிலும் பேச்சுக்களிலும் உபயோகிக்கிறார்கள். இது மட்டுமில்லாமல் ‘இஸ்ராயில்’ என்ற வார்த்தையை தரம்தாழ்த்தி சாபமிடக்கூடச் செய்கிறார்கள்..

அல்லாஹ் தன் குர்ஆனில் யூதர்களை சபித்துள்ளான். ’அல் யஹூத்’ என்றும், ‘பனி இஸ்ராயிலில் நிராகரித்தவர்’ என்றும்தான் அவர்களை சபிக்கிறான். ‘இஸ்ராயில்’ என்று உத்தம நபி யாக்கூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெயரில் அவர்களை கேவலப்படுத்தவில்லை. யூதர்களுக்கும் நபிமார்களான யாக்கூப் மற்றும் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் ஆகியோருக்கும் எந்த மார்க்க உறவும் இல்லை. அந்த நபிமார்களின் மார்க்கத்தின் உரிமை ஈமான் கொண்டவர்களான நம் முஸ்லிம் சமுதயாத்திற்க்குத்தான் உள்ளது.

நிச்சயமாக மனிதர்களில் இப்ராஹீமுக்கு மிகவும் நெருங்கியவர்கள், அவரைப் பின்பற்றியோரும், இந்த நபியும், (அல்லாஹ்வின் மீதும், இந்த நபியின் மீதும்) ஈமான் கொண்டோருமே ஆவார்; மேலும் அல்லாஹ் முஃமின்களின் பாதுகாவலனாக இருக்கின்றான். (அல் குர்’ஆன் 3:68)

ஷைக் ரபீய் பின் ஹாதி அல் மத்கலீ
http://www.salafipublications.com
Check with Article ID: CAF030001

குறிப்பு :
அல்லாஹ்வின் சாபத்துக்குள்ளான இந்த தீமையான நாட்டுக்கு ‘இஸ்ராயில்’ என்ற உத்தம நபியின் பெயரைச் சூட்டி அழைப்பது மட்டுமல்லாமல் ‘பயங்கரவாதி இஸ்ராயில்’, ’தீமையான இஸ்ராயில்’, ’மனித விரோதி இஸ்ராயில்’ என்று நமது நபியை மறைமுகமாக நாமே தரம் தாழ்த்துவது தவறாகும். யாக்கூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இன்று உயிரோடு இருந்தால் இப்படிச் சொல்வதை அவர்கள் விரும்புவார்களா என்று நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். இப்படிச் சொல்வது அல்லாஹ்விற்கு விருப்பமானதாக இருக்குமா என்றும் நாம் சிந்திக்க வேண்டும்.

அல்லாஹ்வுடைய விருப்பத்திற்கும் அவனுடைய பொறுத்தத்திற்கும் தகுதியான விதத்தில் நாம் வாழ அல்லாஹ்விடம் துஆச் செய்கிறேன்.

Masoud bin Ahmed

வணக்கம் என்று சொல்லும் பழக்கம்.

கடவுள் எங்கும் இருக்கிறான் என்று ஹிந்து மதம் போதிக்கிறது. இதனால் தான் அவர்கள், சிலையை வணங்குகிறார்கள். சிலையிலும் கடவுள் இருக்கிறான் என்ற நம்பிக்கையினால் தான் இது நடக்கிறது.மனிதர்கள் உள்ளிலும் கடவுள் இருக்கிறான் என்ற நம்பிக்கையால் தான் மனிதர்களுக்கு வணக்கம் சொல்லும் பழக்கம் துவங்கியது.இது இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைக்கு மாற்றமானது.அல்லாஹ்வை தவிர யாரையும் வணங்க கூடாது என்று நமது மார்கம் கற்றுதந்துள்ளது.அது மட்டும் இல்லாமல், அல்லாஹ், கல்லிலும், மண்ணிலும், கண்ட இடத்திலும் இல்லை. அல்லாஹ் அர்ஷுக்கு மேல் உயர்ந்துள்ளான். (அவன் அமர்ந்துள்ளான் என்று சொல்வதும் மாபெரும் தவறு.குர்ஆனில் அவன் "இஸ்தவா" அதாவது "உயர்ந்துள்ளான்" என்று தான் உள்ளதே தவிர "அமர்வதற்கு" உள்ள வார்த்தையான "ஜலச" என்ற வார்த்தை இல்லை.) இதனால், ஒருவர் நமக்கு வணக்கம் சொன்னால், நாம் பதிலுக்கு அவருக்கு வணக்கம் என்று சொல்வது அல்லது கை செய்கை செய்வதும் தவறாகும். இது இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைக்கு மாற்றமானது என்று அவருக்கு நாம் புரிய வைக்கலாம். இதன் பின் அவர்கள் நம்மிடம் வணக்கம் சொல்வதை தவிர்ப்பார்கள். இதே போல, நமது மூதாதயரிடம் வந்த பழக்கம், "கால் தவராக ஒருவர் மீது பட்டால், தொட்டு முத்தம் இடுவது" .இதுவும் கடவுள் எங்கும் இருக்கிறான் என்பதால், கடவுளை அவமரியாதை செய்துவிட்டதாக கருதி செய்யும் பழக்கம். இந்த பலக்கத்தை முஸ்லிம்கள் கை விட வேண்டும். இந்த தாக்கத்தால், தொழுகையில் சஃப்ஃபில் நிற்கும்போது கால் அருகில் வந்தால், குஷ்டம் உள்ளவர் தொட்டது போல் விலகிப்போகிறார்கள்.