இஸ்லாம் - தூய்மையான மனம்கொண்ட ஸலஃப்களின்(முன்னோர்களின்)பாதையில்...........

Sunday, 6 September 2009

கவாயிதுல் அர்பா (நான்கு அடிப்படைகள்)

-ஷைகுல் இஸ்லாம் முஹம்மத் இப்னு அப்துல்வஹ்ஹாப்
(தமிழில் மஸ்'ஊத் இப்னு அஹ்மத்)


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனாகிய அல்லாஹ்வின் பெயரால்


மகத்தான அர்ஷின் அதிபதியான சங்கைமிக்க அல்லாஹ்விடம் நான் கேட்கிறேன், இவ்வுலகிலும் மறுமையிலும்,அவன் உங்களை பாதுக்காப்பானாக.மேலும் நீங்கள் எங்கிருந்தாலும் அவன் உங்களை முபாரக்காக (அபிவிருத்தயுடையவராக) ஆக்குவானாக. கொடுக்கபட்டிருந்தால் நன்றியுடையவராகவும், சோதிக்கப்பட்டால் பொறுமையுடையவராகவும்,  பாவம் புரிந்திருந்தால் மன்னிப்பை தேடுபவர்களாகவும் இருப்பவர்களில் உங்களை ஆக்குவானாக. நிச்சயமாக இந்த மூன்றும் சந்தோஷத்தின் அடையாளங்களாகும். 


அறிந்துகொள்ளுங்கள், அல்லாஹ் உங்களை அவனுக்கு கட்டுப்பட வழிநடத்தட்டும்,ஹனஃபீய்யா என்பதுதான் இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம் ) அவர்களின் மார்க்கம்.இது என்னவென்றால், இந்த மார்க்கத்தை அல்லாஹ்விற்காக மட்டுமே தூய்மையான மனதோடு ஆக்கிக்கொண்டு,அவனை மாத்திரமே வணங்குவதாகும்;அவன் இவ்வாறு கூறியது போல, " என்னை வணங்குவதற்க்காகவேயன்றி (வேறெதற்காகவும்) ஜின்களையும், மனிதர்களையும் நான் படைக்கவில்லை."(அல்குர்'ஆன் 51:56)
அல்லாஹ் உங்களை அவனை வணங்குவதற்காக மட்டுமே படைத்தான் என்பதை நீங்கள் உணர்ந்தப்பின், அறிந்துகொள்ளுங்கள்,  எப்படி சுத்தத்தோடு இல்லாமல் இருந்தால் தொழுகை, தொழுகையாக கருதப்படாதோ, அதேபோல், வணக்கம் என்பது வணக்கமாக கருதப்படாது, அது தவ்ஹீதோடு இல்லாமல் இருந்தால். எப்படி ஒரு அசுத்தம் சுத்தத்தைப் பாளாக்குகிறதோ, அதே போல், ஷிர்க் (இணைவைப்பு) வணக்கத்தில் நுழைந்துவிட்டால், அது வணக்கத்தைப் பாளாக்கிவிடும்.
ஷிர்க் வணக்கத்தில் நுழைந்துவிட்டால் அது வணக்கத்தைப் பாளாக்கிவிடும், எல்லா நற்கருமங்களையும் நாசமாக்கிவிடும். அதை செய்தவர்கள் நிரந்தர நரகத்தில் இருப்பார்கள். நீங்கள் இதை உணர்ந்தீர்கள் என்றால், தெரிந்துகொள்ளுங்கள், அல்லாஹ் உங்களை அவனுக்கு ஷிர்க் செய்யும் அபாயத்திலிருந்து காப்பாற்றுவதற்க்காக, இந்த உண்மையை நீங்கள் உணர்வதுதான் உங்கள் மீதுள்ள மிக முக்கியமான கடமையாகும். அவனுக்கு  ஷிர்க் செய்வதைப் பற்றி ஆல்லாஹு த'ஆலா கூறினான், " நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இது தவிர மற்றவைகளைத் தான் நாடுவோருக்கு அவன் மன்னிப்பான். எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றானோ நிச்சயமாக அவன் வெகு தூரமான வழிகேட்டில் சென்றுவிட்டான்." (அல்குர்'ஆன் 4:116)
இதை நீங்கள் தெரிவதற்கு, நான்கு அடிப்படைகள் உள்ளன. இவைகளை அல்லாஹ் தன் புத்தகத்தில் தெரிவித்துள்ளான்.
முதல் அடிப்படை என்னவென்றால், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எதிர்த்துப் போராடிய காஃபிர்கள்(இணைவைப்பவர்கள்), மிக உயர்ந்தவனாகிய அல்லாஹ் தான் (எல்லாவற்றையும்) படைத்தவன் என்றும், அவன்தான் சகல காரியங்களையும் திட்டமிட்டு நிகழ்த்துபவன் என்றும் தெரிந்தே இருந்தார்கள். ஆனால், இந்த நம்பிக்கை அவர்களை இஸ்லாத்திற்குள் ஆக்கவில்லை. 
இதற்க்கு ஆதாரமாக அல்லாஹ் கூறினான்,"வானம் மற்றும் பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப்புலனையும் , பார்வைகளையும் சொந்தமாக்கிக் கொண்டிருப்பவன் யார்? இறந்ததிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துபவனும், உயிருள்ளதிலிருந்து இறந்ததை வெளிப்படுத்துபவனும் யார்? (அகிலத்தாரின்) சகல காரியங்களைத் திட்டமிட்டு நிகழ்த்துபவன் யார் ?" என (நபியே!) நீர் கேட்பீராக! அ(தற்க)வர்கள் " அல்லாஹ்தான் " என்று கூறுவார்கள்; அவ்வாறாயின் ," (அவனுக்கு) நீங்கள் பயப்படமாட்டீர்களா?" என்று நீர் கேட்பீராக!!""
(அல்குர்'ஆன் 10:31) 
இரண்டாவது அடிப்படை என்னவென்றால் ,அவர்கள் ( இணைவைப்பவர்கள்) இவ்வாறு கூறினார்கள்: " நாங்கள் அல்லாஹ்விடம் நெருக்கம் தேடுவதற்காகவும், அவனிடம் பரிந்துரை செய்வதற்காகவும் தவிர, அவர்களை (அல்லாஹ் அல்லாதவற்றை) நாடி நாங்கள் அழைக்கவில்லை (பிரார்த்தனை செய்து).”
அவர்கள் அல்லாஹ்விடம் நெருக்கம் தேடினார்கள் என்பதற்கு ஆதாரமாக உள்ள அல்லாஹ்வின் வார்த்தைகள்: "அறிந்து கொள்ளுங்கள்!! தூய மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியதாகும். எவர்கள் அவனையன்றி ( வேறு) பாதுகாவலர்களை எடுத்துக்கொண்டார்களோ அவர்கள் , இவர்கள் அல்லாஹ்விடம் எமக்கு மிகவும் நெருக்கத்தை ஏற்படுத்தி வைப்பதர்க்காகவேயன்றி நாம் இவர்களை வணங்கவில்லை (என்று கூறுகின்றனர்.) அவர்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்களோ,அதில் அவர்களுக்கிடையே நிச்சயமாக அல்லாஹ் தீர்ப்பளிப்பான். நிச்சயமாக அல்லாஹ் பொய்யனையும், நிராகரிப்பாவனையும் நேர்வழியில் செலுத்த மாட்டான். " 
(அல் குர்'ஆன் 39: 3)
அவர்கள் பரிந்துரை தேடினார்கள் என்பதற்கு ஆதாரமாக உள்ள அல்லாஹ்வின் வார்த்தைகள் :
" மேலும், அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு தீமையையோ,அவர்களுக்கு நன்மையையோ செய்ய சக்தியற்றவர்களை அவர்கள் வணங்குகின்றனர். மேலும், ' இவர்கள் அல்லாஹ்விடம் எமக்காகப் பரிந்துரை செய்வோர் ' என்றும் கூறுகின்றனர்.' வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ் அறியாதவை (இருப்பதாக நினைத்து அவை)௦ பற்றி நீங்கள் அவனுக்கு அறிவித்துக் கொடுக்கின்றீர்களா ? அவன் தூய்மையானவன், அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் மேலானவனாகி விட்டான்' என்று ( நபியே !) நீர் கூறுவீராக !" (அல் குர்'ஆன்  10:18) 
பரிந்துரைத்தேடுவதில் இரண்டு முறைகள் உள்ளன : (மார்கத்தில் ) தடுக்கப்பட்ட பரிந்துரைத்தேடல், மற்றும் அனுமதிக்கப்பட்ட பரிந்துரை தேடல். தடுக்கப்பட்ட பரிந்துரைத்தேடல் என்னவென்றால், அல்லாஹ் மாத்திரமே செய்யகூடியவற்றில் ,அல்லாஹ் அல்லாதவரிடம் தேடும் பரிந்துரையாகும். இதற்க்கு ஆதாரமாக அல்லாஹ் கூறினான், " நம்பிக்கை கொண்டோரே !! எவ்வித பேரமோ ,நட்போ, பரிந்துரையோ இல்லாத ஒரு நாள் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்லறங்களில் ) செலவு செய்யுங்கள். நிராகரிப்பாளர்களே அநியாயக்காரர்களாவர். " 
(அல் குர்'ஆன்  2:254) 
அனுமதிக்கப்பட்ட பரிந்துரை, அல்லாஹ்விடம் தேடுவதாகும். இது பரிந்துரைப்பவருக்கு அல்லாஹ் பரிந்துரை செய்ய அனுமதித்த நிலையிலும்
 ,பரிந்துரை செய்யப்படுபவரின் செயல்களும் பேச்சுக்களும் அல்லாஹ்வுக்கு பிடித்தவாறு இருக்கையிலும், அல்லாஹ் அனுமதித்தால் மட்டுமே, நடக்கும் பரிந்துரையாகும் . (இதை அல்லாஹ்விடம் மட்டுமே தேடவேண்டும்.) அல்லாஹ் கூறினான், " அவனது அனுமதியின்றி அவனிடம் யார் தான் பரிந்துரை செய்ய முடியும்? " 
(அல் குர்'ஆன் 2:255) 
மூன்றாவது அடிப்படை என்னவென்றால் ,நபி (ஸ) அவர்கள் பலவற்றை வணங்குபவர்களை எதிர்கண்டார்கள். அவர்களில் மலக்குமார்களை (வானவர்களை) வணங்குபவர்கள், நபிமார்களை வணங்குபவர்கள், மற்றும் நல்லடியார்களை வணங்குபவர்கள் இருந்தார்கள். மற்றும் சிலர் கற்களையும் ,மரங்களையும் ,சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவற்றை வணங்குபவர்களும் இருந்தார்கள் .அல்லாஹ்வின் தூதர் (ஸ) அவர்கள் ,இவர்கள் எல்லோரிடமும் போராடினார்கள். (அவர்கள் வணங்குபவையின் முக்கியத்துவத்தின்அடிப்படையில்,) அவர்கள் மத்தியில் வித்யாசத்தை ,அவர் காணவில்லை. 
இதற்க்கு ஆதாரமாக உள்ள மிக்க உயர்ந்தவனாகிய அல்லாஹ்வின் வார்த்தைகள் : "அன்றியும், ஃபித்னா (குழப்பங்கள், அல்லாஹ்வை தவிர மற்றவைகளை வணங்குவது ) நீங்கி மார்க்கம் அல்லாஹ்விற்கே ஆகும் வரை அவர்களுடன் போர் புரியுங்கள் ." ( அல் குர்'ஆன் 2:193) 
 சூரியனும் சந்திரனும் வணங்கப்பட்டன என்பதற்கு ஆதாரமாக உள்ள மிக்க உயர்ந்தவனின் வார்த்தைகள்,
"இரவும்,பகலும், சூரியனும் சந்திரனும் அவனது அத்தாட்சிகளில் உள்ளவைகளாகும். சூரியனுக்கோ ,சந்திரனுக்கோ நீங்கள் சுஜூது செய்யாதீர்கள். அல்லாஹ்வையே நீங்கள் வணங்குபவர்களாக இருந்தால் அவற்றை படைத்த அவனுக்கே சுஜூது செய்யுங்கள். " (அல் குர்'ஆன் 41:37) 
 வானவர்கள் வணங்கப்பட்டனர் என்பதற்கு ஆதாரமாக உள்ள மிக்க உயர்ந்தவனின் வார்த்தைகள், 
" மேலும், "வானவர்களையும் நபிமார்களையும் ( வணக்கத்திற்குரிய தெய்வங்களான ) ரப்புகளாக எடுத்துக் கொள்ளுங்கள்" என்றும், உங்களுக்கு அவர் கட்டளையிட மாட்டார் ; (அல்லாஹ் ஒருவனுக்கே ) நீங்கள் முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக (முஸ்லிம்களாக ) ஆனதன் பின்னர் நிராகரிக்கும்படி உங்களுக்கு அவர் கட்டளையிடுவாரா? " (அல் குர்'ஆன் 2:80) 
நபிமார்கள் வணங்கப்பட்டனர் என்பதற்கு ஆதாரமாக உள்ள மிக்க உயர்ந்தவனின் வார்த்தைகள்,
மர்யமின் மகன் ஈஸாவே!! 'அல்லாஹ்வையன்றி என்னையும் எனது தாயையும் இரு கடவுள்களாக எடுத்துக் கொள்ளுங்கள்' என்று மனிதர்களுக்கு நீர் கூறினீரா? என அல்லாஹ் கேட்கும் போது , அ(தற்க)வர் 'நீ மிகத் தூய்மயானவன்; எனக்கு உரிமை இல்லாதவற்றை நான் சொல்வதற்குஎனக்கு எந்த அதிகாரமும் இல்லை. நான் அவ்வாறு கூறியிருந்தால் நிச்சயமாக அதை நீ அறிந்திருப்பாய். என் உள்ளத்தில் இருப்பதை நீ அறிவாய். ஆனால் உன் உள்ளத்தில் இருப்பதை நான் அறியமாட்டேன். நிச்சயமாக நீயே மறைவானவற்றை நங்கறிந்தவன்' என்று  கூறுவார் ." (அல் குர்'ஆன் 5:116) 
நல்லடியார்கள் வணங்கப்பட்டனர்என்பதற்கு ஆதாரமாக உள்ள மிக்க உயர்ந்தவனின் வார்த்தைகள்,
"யாரை இவர்கள் அழைக்கின்றார்களோ அவர்களே தமது இரட்சகனிடம்  நெருக்கமானவர்களாக , அவனிடம் நெருங்கும் வழியைத் தேடுகின்றனர். அவனின் அருளை வேண்டிக்கொண்டும் அவனது தண்டனையை அஞ்சிக்கொண்டும் இருக்கிறார்கள். நிச்சயமாக உமது இரட்சகனின் தண்டனை அஞ்சப்பட வேண்டியதாகவே இருக்கின்றது."(அல் குர்'ஆன்  17:57)
கற்களும், மரங்களும் வணங்கபட்டன என்பதற்கு ஆதாரமாக உள்ள மிக்க உயர்ந்தவனின் வார்த்தைகள்,"நீங்கள் (வணங்கும்) லாத்தையும் உஃஜாவையும் கண்டீர்களா? மற்றொன்றாகிய மூன்றாவதான மனாத்தையும் (நீங்கள் கண்டீர்ளா ?)"(அல் குர்'ஆன்  53:19,20)
அபூ வாக்கித் அல் லைத்தீ ( ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், " நாங்கள், சமீபமாக குஃப்ரை விட்டவரான நிலமையில் , நபிகள் (ஸல்) அவர்களோடு ,ஹுனைனிற்கு போய்க் கொண்டிருந்தோம். முஷ்ரிக்கீன்கள் (இனைவைப்பவர்கள்) ,'தாத் அன்வாத்' என்ற மரம் ஒன்று வைத்திருந்தார்கள். அந்த மரத்தின் மீது பக்திகொண்டு ,அவர்களின் ஆயுதங்களை அந்த மரத்தில் தொங்கவிட்டுக் கொண்டிருந்தார்கள். நாங்கள் ஒரு மரத்தைக்கடந்தபோது ,  'அல்லாஹ்வின் தூதரே !! அவர்களுக்கு தாத் அன்வாத் இருப்பது போன்று எங்களுக்கும் ஒரு தாத் அன்வாத்தை நியமியுங்கள் ' என்று கூறினோம். அதற்க்கவர், ' அல்லாஹு அக்பர் ,அல்லாஹு அக்பர் ,அல்லாஹு அக்பர் !!( அல்லாஹ் மிக பெரியவன் ) என் உயிர் எவன் கைவசத்தில் உள்ளதோ, அவன் மீது ஆணையாக , இது இஸ்ராயீலின் சந்ததியினர் மூஸாவிடம் ' அவர்களுக்கு கடவுள்கள் இருப்பது போன்று எங்களுக்கும் ஒரு கடவுள் ஏற்படுத்துவீராக !' என்று சொன்னது போன்று உள்ளது."நிச்சயமாக நீங்கள் அறிவற்ற சமூகத்தினர்' (அல் குர் ஆன்  7:138) " என்று கூரினார்.
ஆதாரம்: திர்மிதீ (2180),அஹமத் (5/218) ,இப்னு அபீ ஆசிம் அவர்களின் 'அஸ்ஸுன்னா' (76), இப்னு ஹிப்பான் அவர்களின் 'ஸஹீஹ் '( 6702) .இதை இப்னு ஹஜர் , அல் இஸாபா என்ற நூலில் சரிகண்டுள்ளார்கள்(4/216) .
நாங்காவது அடிப்படை என்னவென்றால் ,அன்று வாழ்ந்த முஷ்ரிகீன்களின் (இனைவைப்பவர்களின் ) இனைவைப்பை விட இன்றுள்ள இனைவைப்பவர்களின் இனைவைப்பு மிகவும் மோசமானதாக உள்ளது. ஏனென்றால், அந்த இனைவைப்பார்கள் சமாதான நேரங்களில் தான் அல்லாஹ்விற்குஇனைவைத்தார்கள். கஷ்டமான நேரங்களில் அல்லாஹ்வை மாத்திரமே தூய்மயாக வணங்கினார்கள். ஆனால் நமது காலத்தில் உள்ள இனைவைப்பவர்களின் இனைவைப்பு,சமாதான நேரங்களிலும் ,கஷ்டமான நேரங்களிலும் எப்போதுமே தொடர்சியாக உள்ளது. 
இதற்க்கு ஆதாரமாக உள்ள மிக்க உயர்ந்தோனின் வார்த்தைகள்:
"மேலும், அவர்கள் கப்பலில் ஏறி(ய பின் ஆபத்தில் சிக்கி)க் கொண்டால்,அவர்கள் முற்றிலும் வணக்கத்தை அவனுக்கே கலப்பற்றதாக ஆக்கியவர்களாக அல்லாஹ்வை அழைக்கின்றனர். அவன், அவர்களைக் கரையின் பால் காப்பாற்றிய பொழுது, அவனுக்கே அவர்கள் இனைவைக்கின்றனர்.”
(அல் குர்'ஆன்  29:65)
ஆகயால், இதன் அடிப்படையில் யார் பிரார்த்தனைசெய்து அழைக்கிறாரோ,அவர் ஒரு வணக்கத்தைச் செய்கிறார்.(பிரார்த்தனை செய்து அழைப்பது வணக்கமாகும்).
இதற்கு ஆதாரமாக உள்ள மிக்க உயர்ந்தோனின் வார்த்தைகள்:
"அல்லாஹ்வையன்றி மறுமைநாள் வரை தனக்கு எந்த பதிலையும் அளித்திடாதோரை அழைப்பவனை விட மிகவும் வழிகெட்டவன் யார்? அவர்களோ இவர்களின் அழைப்பை உணராதவர்களாக இருக்கின்றனர்.” (அல் குர்'ஆன் 46:5)
ஆல்லாஹ் எல்லாம் அறிந்தவன். ஆல்லாஹ்வின் சாந்தியும் சமாதனமும் முஹம்மத் அவர்கள் மீதும், அவர் குடும்பத்தார் மீதும் ,அவர் தோழர்கல் மீதும் உண்டாகட்டும்.

No comments:

Post a Comment